கடித்த கட்டுவிரியன்; கையோடு மருத்துவமனைக்கு கொண்டுவந்த பெண் - உறைந்த ஊழியர்கள்!
கடித்த கட்டுவிரியன் பாம்பை பெண் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.
கடித்த கட்டுவிரியன்
தூத்துக்குடி, ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35). வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால், கூச்சலிட்ட அவரை சரவணன் அங்கு வந்து அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆண் பாம்பை கொன்ற மனிதரை துரத்தி துரத்தி 7 முறை கடித்த பெண் பாம்பு..சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்..!
ஊழியர்கள் அதிர்ச்சி
அப்போது கேரி பேக்கில் தன்னை கடித்த பாம்பு இதுதான் எனக் கூறி காட்டியுள்ளார். அதனைப் பார்த்த ஊழியர்கள் பதறியுள்ளனர். ஆனால் பாம்பு உயிரோடு இல்லை என அறிந்து விசாரணை நடத்தி,
பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.