பாம்புகளை யாராவது அடித்து கொன்றால் 3 ஆண்டு சிறைத்தண்டனை - வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
பாம்புகளை யாராவது அடித்து கொலை செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாம்புகள்
இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்ற பாம்புகள் மிகவும் விஷத் தன்மை கொண்டவை.
ஆனால், நமக்கு ‘பாம்பு’ என்ற சொல் நம் காதில் விழுந்தாலே பயந்து அலறி ஓடிவிடுவோம். காரணம் பாம்புகளில் உள்ள நஞ்சு. ஆனால், உண்மையில் பெரும்பாலான பாம்புகள் விஷம் இல்லாதவை. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்குவது கிடையாது.
வேண்டுமேன்றெ நெருங்கி அவர்களை துன்புறுத்துவதை விரும்பாது. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கும். ஆனால், மனிதர்கள் பாம்பைக் கண்டால் தேவையில்லாத அச்சம் கொண்டு பயந்து ஓடுவார்கள். அல்லது அடித்து கொலை செய்ய முற்படுவார்கள். இதனால் பாம்புகளின் ஒரு வகையான இனங்கள் அழிந்து வருகிறது.
வனத்துறை அதிகாரி எச்சரிக்கை
இந்நிலையில், வனத்துறை அதிகாரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வாகனங்களிலோ பாம்புகள் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து பாம்புகளை அடித்து கொலை செய்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி 3 வருடம் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.