தலைமுடியை வெட்டி பெண்ணுக்கு தண்டனை - முதல்வருக்கு வலுக்கும் எதிர்ப்பு

West Bengal
By Karthikraja Jul 19, 2024 07:00 PM GMT
Report

தண்டனையாக பெண் ஒருவரின் கூந்தல் வெட்டப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கம்

மேற்குவங்கத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை ஆண் ஒருவர் கத்தரிக்கோல் மூலம் வெட்டி அகற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதிற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் மேற்குவங்க பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

west bengal girl haircut

அந்த பதிவில், இம்முறை ஹவுராவின் டோம்ஜூரில் இச்சம்பவம் நடந்துள்ளது. டோம்ஜூர் தொலைதூரப் பகுதி அல்ல. ஹவுரா நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி. கூச் பெஹார் முதல் சோப்ரா, அரியதாஹா மற்றும் டோம்ஜூர் வரை இந்த துயரம் தொடர்கிறது.

சிறுவன் உட்பட மூவர் கொலை; அம்மாவிற்காக கொலை செய்தேன் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சிறுவன் உட்பட மூவர் கொலை; அம்மாவிற்காக கொலை செய்தேன் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

திரிணாமுல் காங்கிரஸ்

நேற்று, ஒரு பெண்ணின் தலைமுடி இரக்கமில்லாமல், கத்தரிக்கோலால், தண்டனையாக வெட்டப்பட்டது. இந்த கொடூரச் செயலைச் செய்த இஷா லஷ்கர், அபுல் ஹொசைன் லஷ்கர், சயீம் லஷ்கர், மக்புல் அலி, இஸ்ரேல் லஷ்கர், அர்பாஸ் லஷ்கர் & மெஹபுல்லா மித்தே ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மாநிலம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இங்கு உடனடி நீதி, குறிப்பாக பெண்கள் விஷயத்தில் வழங்கப்படுகிறது." என கூறி உள்ளார். 

மேலும் இது குறித்து பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர்அமித் மாளவியாவும் இந்த வீடியோவை பகிர்ந்து, , “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க, மாநிலத்தை பழமைவாத பாதையில் பின்னோக்கி தள்ளியுள்ளார்” என கருத்து தெரிவித்துள்ளார்.   

 கடந்த வாரம் இதே போல் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா நகரில் கணவன் மனைவி இருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியது.