Sunday, May 18, 2025

வலியால் துடித்த கர்ப்பிணி; நடுவானில் பிறந்த குழந்தை - நெகிழ்ச்சி சம்பவம்!

Pregnancy Flight Jordan
By Swetha a year ago
Report

விமானம் பயணம் மேற்கொண்ட பெண் பயணிக்கு திடீரென குழந்தை பிறந்த சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடுவானில் அதிசயம் 

ஜோர்டன் தலைநகரம் அம்மானில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

வலியால் துடித்த கர்ப்பிணி; நடுவானில் பிறந்த குழந்தை - நெகிழ்ச்சி சம்பவம்! | Woman Gives Birth Mid Flight Help Of Uk Doctor

சுமார் 2 மணிநேரம் விமான பயணத்தின் போது உடனடியாக விமான குழுவினர் அவசர மருத்துவ நிலையை அறிவித்துள்ளனர்.அதிர்ஷ்டவசமாக அங்கு ஹசன் கான் என்ற மருத்துவர் பயணித்து இருக்கிறார்.

விமான குழுவினர் அவரை உதவிகாக அழைத்ததும், அப்பெண்ணை சென்று பார்க்கையில் பனிக்குடம் உடைந்து நீர் வந்திருப்பதைக் கண்டிருக்கிறார்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை அறிந்த அந்த மருத்துவர் உடனே பிரசவம் பார்க்க தொடங்கினார்.

பிரசவ லைவ் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி!! வயிற்றிலிருந்து வெளிவந்த அழகிய குழந்தை!!

பிரசவ லைவ் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி!! வயிற்றிலிருந்து வெளிவந்த அழகிய குழந்தை!!

என்ன நடந்தது?

இந்நிலையில், அவரது உதவியால் 38 வயதான பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அடுத்து, விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

வலியால் துடித்த கர்ப்பிணி; நடுவானில் பிறந்த குழந்தை - நெகிழ்ச்சி சம்பவம்! | Woman Gives Birth Mid Flight Help Of Uk Doctor

அங்குள்ள மருத்துவமனையில் தாயும் குழந்தையும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆரோக்கியத்தோடு நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுவே, 75-வது முறையாக வணிக விமானத்தில் குழந்தை பிறந்துள்ளது என கேபின் குழுவினர் கூறியுள்ளனர்.  

இதை குறித்து பேசிய மருத்துவர், "விமானம் வேறு பாதையில் திருப்பப்பட்டதால், எனது பணிக்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதத்திற்கான காரணத்தை அறிந்த எனது உயரதிகாரி என்னை பாராட்டினர்," என்று குறிப்பிட்டுள்ளார்.