ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் - தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
பெண்னைக் கடத்தி தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
டெல்லியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உத்தரபிரதேசம், காசியாபாத் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் டெல்லி திரும்ப இரவு பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.

அப்போது, காரில் வந்த 5 பேர் அப்பெண்னை கடத்தி சென்றுள்ளனர். மேலும், 2 நாட்களாக அந்தப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கொடுமை
தொடர்ந்து, அந்தப் பெண் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். விசாரணையில், குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரும் அந்த பெண்ணுக்கு பழக்கம் உடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரும்பு கம்பி சொருகப்பட்டதாக மகளிர் ஆணைய தலைவி தெரிவித்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
இசசம்பவத்திற்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகின்றன.