பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை - தகாத உறவால் நேர்ந்த விபரீதம்!

Tamil nadu Sexual harassment Crime
By Sumathi Nov 08, 2022 06:24 AM GMT
Report

கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

விழுப்புரம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கருத்து வேற்பாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை - தகாத உறவால் நேர்ந்த விபரீதம்! | Woman Gang Raped In Vilupuram Crime

இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தகாத உரவு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும், மரக்காணம் தைலமர தோப்பில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

இதனைக் கண்ட அதேப் பகுதியைச் சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் கள்ளக்காதலனை மிரட்டியுள்ளனர். அதனால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அதன்பின் அந்தப் பெண்ணை மிரட்டி இருவரௌம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதனை வீட்டியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அதனை வைத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், பணம் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பெண் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதற்கிடையில், பணம் தராததால் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால் பயந்த பெண் மகள்களின் நிலையை உணர்ந்து தற்கொலை முடிவை கைவிட்டு போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். அடஹ்ன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.