தொலைந்து போன 68 வயது மூதாட்டி - குடும்பத்தோடு சேர்த்து வைத்த கூகுள்!
தொலைந்து போன மூதாட்டி கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் குடும்பத்தோடு சேர்த்து வைக்கப்பட்டார்.
மூதாட்டி மிஸ்ஸிங்
உத்தரக்காண்ட்டில் பிரசித்த பெற்ற ஆலயம் கேதர்நாத். இந்தியா முழுவதும் இங்கு சுற்றுலா வருவது வழக்கம். அதன் வரிசையில், ஆந்திராவைச் சேர்ந்த குடும்பம் வந்துள்ளனர்.

அப்போது, மோசமான வானிலை நிலவியதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள 68 வயது மூதாட்டி ஒருவர் தனியாக தொலைந்து விட்டார். அவருக்கு தெலுங்கை தவிர எந்த மொழியும் தெரியவில்லை.
கூகுள் உதவி
இந்நிலையில், ஒருவழியாக கவுரிகுண்ட் என்ற பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டார். அங்கு அவரிடம் போலீஸார் பேசியுள்ளனர். மொழி பிரச்சனையால் போலீஸார் தொழில்நுட்ப வசதியை நாடியுள்ளனர்.
கூகுள் ட்ரான்ஸ்லேட் அம்சத்தை பயன்படுத்தி மொழிபெயர்பு செய்து மூதாட்டி கூறுவதை புரிந்துக் கொண்டுள்ளனர். அதனையடுத்து, பெண் கூறியதை வைத்து குடும்பத்தாரை தொடர்பு கொண்டனர்.
இதற்கிடையில், குடும்பம் சோன்பிரயாக் என்ற பகுதிக்கு சென்ற நிலையில் தனி வாகனம் வைத்து மூதாட்டியை குடும்பத்துடன் சேர்த்தனர்.