ஆண் குழந்தை வேணும் - மனைவியை பொதுமக்கள் முன் நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்!

Sexual harassment India Crime
1 மாதம் முன்

மனைவியை மக்கள் முன்னிலையில், கணவன் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் கொடுமை

மராட்டிய மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண்(30), 2013ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இருந்தே அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.

ஆண் குழந்தை வேணும் - மனைவியை பொதுமக்கள் முன் நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்! | Woman Forced To Bath In Public Pune

மேலும், ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் மாமியார் அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில், அவரது கணவருக்கு கோலாப்பூரைச் சேர்ந்த மவுலானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாந்திரீக பரிகாரம்

அதனைத் தொடர்ந்து, கணவர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மவுலானாவிடம் அழைத்துச் சென்று சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த பெண்ணின் கணவருடைய தொழில் லாபம் அடையும் என்றும் மவுலானா கூறியுள்ளார்.

ஆண் குழந்தை வேணும் - மனைவியை பொதுமக்கள் முன் நிர்வாணமாக குளிக்க வைத்த கணவன்! | Woman Forced To Bath In Public Pune

மேலும், அவரிடம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க கணவரின் உடன்பிறந்தவர்கள் ஆலோசனை கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணை பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்கச் சொன்னார்.

நிர்வாண குளியல்

அவ்வாறு செய்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சடங்குகளைப் பின்பற்றி அந்தப் பெண்ணை முழு நிர்வாணமாக பொது மக்கள் பார்வையில் குளிக்க வற்புறுத்தினர்.

இதனையடுத்து, அந்த பெண் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில், போலீசார் அவருடைய கணவர், மாமியார், உறவினர்கள் மற்றும் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.