தகாத உறவு: காதலனுக்கு 15 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய்!
காதலனுக்கு, 15வயது மகளை தாய் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்தவர் சகுந்தலா(33). இவருக்கு 15 வய்தில் மகள் ஒருவர் உள்ளார். இவர் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், தாய்க்கு அதேப் பகுதியைச் சேர்ந்த உறவினர் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 28 வயதுடைய இளைஞர் அப்பெண் வீட்டிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து அதே வீட்டிலேயே தங்குவதற்கு வழி கேட்டுள்ளார். அதற்கு அந்தப்பெண் தனது மகளை திருமணம் செய்துக் கொண்டால் இங்கேயே இருக்கலாம் என கூறியுள்ளார்.
கொடூர செயல்
இளைஞரும் அதற்கு சம்மதித்து, 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து கோவில் ஒன்றில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதோடு அந்த இளைஞருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளார் அவரது தாய்.
இதனால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுகுறித்து அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரிடமும், சமூக சேவகர் ஒருவரிடமும் கூறியுள்ளார். அதன்பின் அவரது தாய் மற்றும் இளைஞர் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது.
இருவரும் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தற்கொலை செய்துகொள்வேன் என சிறுமியை மிரட்டி திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.