கணவனின் கிட்னியை ரூ.10 லட்சத்துக்கு விற்று கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி - பகீர்!
கணவனின் கிட்னியை விற்று அந்த பணத்துடன் மனைவி தனது கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
மேற்கு வங்கம், சங்க்ரெய்ல் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 10 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவரிடம் வீட்டின் நிதிநிலைமையை கூறி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் தொடர்ந்து கணவனை சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். மனைவியின் தொல்லை தாங்காமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தை மனைவியிடம் கொடுத்துள்ளார்.
மனைவி செய்த துரோகம்
இதற்கிடையில் பாரக்பூரைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவருடன் ஃபேஸ்புக்கில் இந்த பெண் அறிமுகமாகியுள்ளார். இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளார். இந்நிலையில் கணவம் வி்ற்று கொடுத்த 10 லட்சத்துடன் பெண்,
தனது கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கணவர் அவர்கள் வசிக்கும் முகவரியை கண்டுபிடித்து குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு நேரில் சென்றுள்ளார்.
அப்போது மனைவி வாக்குவாதம் செய்து அனைவரையும் துரத்தியுள்ளார். இதனையடுத்து போலீஸில் புகாரளித்துள்ளனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.