3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் பென் - மனதை உருக்கும் காட்சிகள்!

Malaysia Viral Photos
By Sumathi Oct 16, 2025 05:40 PM GMT
Report

3 குழந்தைகளுடன் பெண் உணவு டெலிவரி செய்யும் காட்சிகள் வியக்க வைக்கிறது.

உணவு டெலிவரி

மலாக்காவை சேர்ந்தவர் நோரியானி சயாகிரா யாகோப். இவர் கணவர் வேலைக்குச் செல்வதால் 3 குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார்.

3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் பென் - மனதை உருக்கும் காட்சிகள்! | Woman Food Delivery With 3 Kids Viral

அப்போது கணவரின் வருமானம் குறைவாக இருப்பதால் தானும் வேலைக்குச் செல்ல வேண்டும் என நோரியானி முடிவெடுக்கிறார். இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர்,

தாய் செயல்

தனது 3 குழந்தைகளையும் பைக்கில் அமரவைத்துக் கொண்டு பணிக்குச் சென்று வருகிறார். மூத்த மகனை பள்ளிக்கு அனுப்பிய பிறகு 2 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்து வருகிறார்.

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

இதுகுறித்து பேசிய அவர், எல்லா இடங்களுக்கும் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடிவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.