6 ஆயிரம் மாணவர்களுக்கு காய்ச்சல்; மூடப்பட்ட பள்ளிகள் - ஊரடங்கு?

Cold Fever Malaysia Education
By Sumathi Oct 14, 2025 06:13 PM GMT
Report

6 ஆயிரம் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பாதித்துள்ளது.

இன்புளுயன்சா காய்ச்சல்

மலேசியாவில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் காய்ச்சலால் அவதியுற்றுள்ளனர்.

malaysia

கடந்த வாரம் மட்டுமே 97 பேர் இன்புளுன்யசா காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 6000 பள்ளி மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிரடியாக களத்தில் இறங்கிய Gen-Z - நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்!

அதிரடியாக களத்தில் இறங்கிய Gen-Z - நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்!

பள்ளிகள் மூடல்

இவர்களில் பெரும்பாலானவர்கள் மழலையர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹமது கூறியதாவது, கோவிட் 19 தொற்றுக்காலத்தில் இருந்து இதுபோன்ற இன்புளுயன்சா காய்ச்சலை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இருக்கிறது.

6 ஆயிரம் மாணவர்களுக்கு காய்ச்சல்; மூடப்பட்ட பள்ளிகள் - ஊரடங்கு? | Influenza Malaysia 6000 Students Schools Closed

தற்போது 6000 பள்ளி மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அனைத்து பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். எங்கும் குழுவாக இருந்து நோய் தொற்றுகளை பரப்பக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.