40 வயது கணவருக்கு குறை; வீட்டில் சிக்கிய ஆவணங்கள் - மனைவி செய்த காரியம்!

India Maharashtra
By Jiyath Jan 30, 2024 10:45 AM GMT
Report

தன்னை ஏமாற்றி மோசடி செய்து திருமணம் செய்துகொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனைவி புகார் அளித்துள்ளார்.

மனைவி புகார்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ஆணுக்கும், 32 வயதான பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது.

40 வயது கணவருக்கு குறை; வீட்டில் சிக்கிய ஆவணங்கள் - மனைவி செய்த காரியம்! | Woman Files Cheating Complaint Against Husband

இந்நிலையில், தனது கணவர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது கணவர் ஆண்மை குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஆவணங்கள் எனக்கு வீட்டிலிருந்து கிடைத்தது.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

விசாரணை 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையாக பதில் கூறவில்லை. இதனால் சமீபத்தில் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது, தான் ஆண்மை குறைவுக்கு சிகிச்சை பெற்றதையும், அதை மறைத்து திருமணம் செய்து கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

40 வயது கணவருக்கு குறை; வீட்டில் சிக்கிய ஆவணங்கள் - மனைவி செய்த காரியம்! | Woman Files Cheating Complaint Against Husband

எனவே என்னை ஏமாற்றி மோசடி செய்து திருமணம் செய்துகொண்ட எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.