ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் அரசு பள்ளி

Maharashtra
By Thahir 1 மாதம் முன்

ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் மட்டும் படித்து வருகிறார். அவருக்கு ஒரு ஆசிரியர் இரண்டு வருடங்களாக பாடம் நடத்தி வருகிறார்.

ஒரே ஒரு மாணவருக்காக இயங்கும் அரசு பள்ளி 

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது.

அனைவருக்கும் கல்வி என்ற அரசு திட்டத்தின் கீழ் இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் படித்து வருகிறார்.

A government school serving only one student

அந்த ஒரு மாணவருக்காக 12 கி.மீ பயணம் செய்து வந்து ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார். இந்த கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ஷேகோக்கர் என்ற ஒரு மாணவர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

நீண்ட துாரம் பயணம் செய்து வந்து பாடம் எடுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் 

இந்த ஒரு மாணவருக்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் இரண்டு வருடங்களாக பாடம் நடத்தி வருகிறார். இது குறித்து ஆசிரியர் கிஷோர் கூறுகையில்,

இந்த கிராமத்தில் 150 மக்கள் வசிக்கின்றனர். ஒரே ஒரு மாணவர் தான் இரண்டு வருடங்களாக படித்து வருகிறார். நான் தான் அவருக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி வருகிறேன்.

அரசு வழக்கும் அனைத்து திட்டங்களும் இந்த மாணவருக்கு வழங்கப்படுகிறது, என்று ஆசிரியர் கிஷோர் கூறுகிறார்.

ஒரு மாணவர், ஒரு ஆசிரியரை உள்ள நிலையில் பள்ளி தொடர்ந்து சிறப்பாக நடந்து வருவதை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.