ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றுகிறார் - பிரபல பாடகர் மீது பெண் புகார்!

Tamil nadu Chennai Tamil Nadu Police Crime
By Swetha Nov 08, 2024 08:30 AM GMT
Report

பிரபல டிவி பாடகர் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

 உல்லாசம்.. 

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் பாடகர் குரு குகன். இவர் தனியார் 'டிவி' இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். அவ்வப்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இவர் பாடி வருவதும் உண்டு.

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றுகிறார் - பிரபல பாடகர் மீது பெண் புகார்! | Woman Filed Case Against Tv Singer Guru Gugan

இந்த நிலையில் இவர் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் மென் பொறியாளர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், கடந்த மே மாதம், சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.

மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் குருகுகன் அறிமுகமானார். தனியார் 'டிவி' இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். 'ேஹப்பி ஸ்ட்ரீட்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும் பாடி உள்ளார். என் மொபைல் போன் எண்ணை வாங்கி, நட்பாக பேசி வந்தார்.

தனக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறிய அவர், 'உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது' என்றார். 'நான் உங்களை விட ஐந்து வயது மூத்தவள்' என்றேன்; 'அது ஒன்றும் பிரச்னை இல்லை' என்று கூறினார். 'நீங்கள் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள்.

ஆசை வார்த்தை கூறி இப்படி செய்றாங்க..பகலில் பிச்சை, இரவில் பாலியல் தொழில்?

ஆசை வார்த்தை கூறி இப்படி செய்றாங்க..பகலில் பிச்சை, இரவில் பாலியல் தொழில்?

 பெண் புகார்

இதனால் ஒத்துவராது' என, மறுப்பு தெரிவித்தேன். 'ஜாதி பெரிய விஷயம் அல்ல' எனக் கூறி, என் வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் பெண் கேட்டார்.என் பெற்றோரும், 'நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றுகிறார் - பிரபல பாடகர் மீது பெண் புகார்! | Woman Filed Case Against Tv Singer Guru Gugan

என் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது' என, கூறி விட்டனர் அப்போதும் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து, எனக்கு திருமண ஆசை காட்டி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலையில் என் அக்கா வீட்டில் நான் மட்டும் இருந்தபோது, அங்கு வந்தார்.

தனிமையில் இருப்பதை பயன்படுத்தி, என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருந்தார். என்னை பதிவு திருமணம் செய்வதாக கூறி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியே, பலமுறை நெருக்கமாக இருந்தார்.

நான் கருவுற்றேன். இது எங்கள் வீட்டிற்கு தெரிந்தால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கட்டாய கருக்கலைப்புச் செய்ய வைத்தார். தற்போது, ஜாதியை காரணமாக கூறி,

திருமணம் செய்ய மறுத்து வருகிறார். என்று கூறப்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப்பதிவு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.