சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..இனி இந்த தைரியம் யாருக்கும் வரக்கூடாது - இபிஎஸ் கண்டனம்!

Tamil nadu Edappadi K. Palaniswami Virudhunagar
By Swetha Sep 03, 2024 01:00 PM GMT
Report

பெண் டிஎஸ்பி மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் கண்டனம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல்

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..இனி இந்த தைரியம் யாருக்கும் வரக்கூடாது - இபிஎஸ் கண்டனம்! | Woman Dsp Assault None Should Have Courage Eps

தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே,

போதைப்பொருள்; விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்..அதை செய்ய வேண்டும் - ஈபிஎஸ்!

போதைப்பொருள்; விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்..அதை செய்ய வேண்டும் - ஈபிஎஸ்!

சந்தி சிரிக்கிறது..

தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம். அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்,

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..இனி இந்த தைரியம் யாருக்கும் வரக்கூடாது - இபிஎஸ் கண்டனம்! | Woman Dsp Assault None Should Have Courage Eps

இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.