திருமணத்திற்கு வந்த பெண்மணி - ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!
எண்ணூரில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள், ஒரு பெண்மணி ராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்பட்டனர்.
ராட்சத அலை
கடலூர், விருத்தாலச்சலம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த சுமார் 400பேர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வந்துள்ளனர். அப்போது, சென்னையை அடுத்த எண்ணூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 50 பேர் எண்ணூர் கடலில் குளித்துள்ளனர்.
அப்போது ராட்சத அலைகளால் 2 சிறுவர்கள் மற்றும் 1 பெண்மணி அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதனையடுத்து சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
உயிரிழந்த பரிதாபம்
அப்போது அப்படகு ராட்சத அலைகளால் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, 2 சிறுவர்களையும் மீனவர்கள் கைகளில் கெட்டியாக பிடித்துக்கொண்டு அழைத்து வரப்பட்டனர். மேலும் உயிருக்கு போராடிய அந்த பெண்மணியின் மோசமான நிலையால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன்பின், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அந்த பெண்மணியை அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த 48 வயதுடைய ஷகிலா என்ற பெண்மணி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.