விசா கிடைக்கல.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை!
விசா கிடைக்காத்தால் பெண் மருத்துவர் தற்கொலை செய்துள்ளார்.
மன அழுத்தம்
ஆந்திரா, பத்மா ராவ் நகரில் தனியாக வசித்து வந்தவர் பெண் மருத்துவர் ரோஹினி(38). இவர் வீட்டு கதவு திடீரென திறக்காததால், அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்றபோது, அவர் சடலமாக காணப்பட்டார்.

அவரது வீட்டில் கிடைத்த தற்கொலை குறிப்பில், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், விசா நிராகரிக்கப்பட்டதை குறித்தும் ரோஹினி எழுதியிருந்தார்.
மருத்துவர் தற்கொலை
இவர் கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்த ஒரு புத்திசாலி மாணவி. அமெரிக்காவில் மருத்துவத் தொழில் தொடங்குவது அவரது நீண்ட நாள் கனவு. ஆனால், விசா மறுக்கப்பட்டதால் அவர் ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் தாய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரோஹினி அதிகப்படியான மாத்திரைகள் அல்லது ஊசி மூலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தொடர்ட்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.