கதவில் சிக்கிய சேலை; தண்டவாளத்தில் விழுந்த பெண், தவித்த குழந்தை - பயணிகளே கவனம்!
மெட்ரோ ரயிலில் ஆடைகள் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ விபத்து
டெல்லி இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ரீனா (35) என்ற பெண் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியில் ஏறியுள்ளார். ஆனால், அதே வேகத்தில் வெளியே வந்தார்.
ஆனால் அதற்குள் யில் பெட்டியின் கதவு மூடிக் கொண்டதால் அவரது சேலை சிக்கிக் கொண்டது. உடனே ரயில் புறப்பட்டது. அதற்குள் ரயில்வேகமெடுக்க கதவில் சேலை சிக்கிய நிலையில், ரீனா நடைமேடையில் பல மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
பெண் பலி
நடைமேடையை தாண்டி ரயில் சென்ற பிறகு பலத்த காயங்களுடன் அவர் வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த ரீனா, உயிரிழந்தார். இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்புக்கான ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் றங்கி,அங்கு நின்றிருந்த தனது குழந்தையை அழைக்க சென்றதில், சேலை கதவில் சிக்கியது தெரியவந்தது.
தொடர்ந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.