மகளை ஆசையாக சந்திக்க சென்ற தாய் - விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
விமானத்தில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ்
மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11.10 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இரங்கினர்.
ஆனால் பெண் ஒருவர் இருக்கையை விட்டுநகராமல் இருந்தார். இதனைக் கவனித்த விமான ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் பதிலளிக்காமலிருந்தார்.இது தொடர்பாக விமான நிலையத்திலிருந்த மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அவர்கள் பெண்ணை பரிசோதனை செய்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது . மேலும் அவர் தூக்கத்தில் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாரடைப்பு
இதனையடுத்து அதிகாரிகள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் சென்னை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர் .
காவல்துறையின் முதற்கட்ட விசரணையில் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கலையரசி (58) என்பது தெரியவந்தது.ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளைச் சந்தித்து விட்டுத் திரும்பி உள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு நடுவானிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.