29 மணிநேரம் இடைவிடாமல்..மருத்துவ மாணவருக்கு நேர்ந்த கொடூரம்-நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
கேரளத்தில் சக மாணவர்கள் ராகிங் செய்ததால் கால்நடை மருத்துவ மாணவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ மாணவர்
கேரளா மாநிலம்,வயநாட்டில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சித்தார்த்தன் (20) படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இதற்கிடையில், சக மாணவர்கள் மற்றும் மூத்த மாணவர்களால் சித்தார்த்தன் தொடர்ந்து 29 மணிநேரம் கொடூரமாய் ராகிங் செய்யப்பட்டுள்ளார்.
இதனால்,உடல் மற்றும் மனதளவில் சித்ரவதைக்கு ஆளான சித்தார்தன், தற்கொலை முடிவுக்கு தூண்டப்பட்டு உள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக 20 பேர் மீது குற்றவியல் சதி மற்றும் தற்கொலைக்கு தூண்டல் மற்றும் கேரளா ராகிங் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேர்ந்த கொடூரம்
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 16-ந்தேதி காலை 9 மணியில் இருந்து, பிப்ரவரி 17-ந்தேதி மதியம் 2 மணி வரை தொடர்ந்து கைகளாலும், பெல்ட் கொண்டும் கொடூர முறையில் ராகிங் செய்துள்ளனர் . இதனால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி இந்த கல்வி மையத்தில் தொடர்ந்து படிக்க முடியாது.
படிப்பையும் நிறைவு செய்ய முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார். மனநிலை பாதித்து, தற்கொலை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை என உணர்ந்த அவர், ஆடவர் விடுதி குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.
இது பிப்ரவரி 18-ந்தேதி மதியம் 12.30 மணி முதல் 1.45 மணிக்குள் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.