படுக்கையறையில் மனைவி; கணவரின் அண்ணன் செய்த கொடூரம் - என்ன நடந்தது?

Attempted Murder Chennai Crime
By Sumathi Jan 06, 2025 07:33 AM GMT
Report

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புது மணப்பெண் மரணம்

ஆவடி காமராஜ் நகரில் வசித்து வரும் தம்பதி சீனிவாசலு - தானம்மா. இவர்களுக்கு பிரேம் குமார் மற்றும் ராஜ்குமார் என்ற இரட்டையர் மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

படுக்கையறையில் மனைவி; கணவரின் அண்ணன் செய்த கொடூரம் - என்ன நடந்தது? | Woman Died Brother In Law Abuse Avadi

இதில், தம்பி ராஜ்குமார், தனது சொந்த அத்தை மகளான பியூலா ராணி என்பவரை காதலித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருகட்டத்தில் பல போராட்டங்களை தாண்டி ராஜ்குமார் - பியூலா ராணி திருமணம் நடைபெற்றுள்ளது.

யார் அந்த சார்? சிறப்பு புலனாய்வு குழுவிடம் உறுதியாக கூறிய மாணவி

யார் அந்த சார்? சிறப்பு புலனாய்வு குழுவிடம் உறுதியாக கூறிய மாணவி

தீவிர விசாரணை

தொடர்ந்து தங்களது மகளுக்கு எந்த பிரச்சினையும் நேர்ந்து விடக்கூடாது என முத்திரைத்தாள் பத்திரத்தில் பெண் வீட்டார் எழுதி வாங்கியுள்ளனர். பின் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பியூலா ராணி, சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.

chennai avadi

உடனே விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், கணவனின் அண்ணன் பிரேம் குமார், தன்னிடம் அத்துமீறியதாக கூறி பியூலா ராணி போன் செய்து முறையிட்டு அழுததாக பியூலாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். பியூலா ராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில்,

அவரின் கழுத்தின் முன்பகுதியில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜ்குமாரையும், பிரேம்குமாரையும் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பியூலாவின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.