துணி கடைக்கு சென்ற மனைவி.. கழுத்தில் 2 தாலி - திருமணமான 20 நாளில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருமணமான இளம்பெண் பேருந்து நிலையத்தில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும், கருப்பூரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி, தனது புதுமனைவியை அழைத்துக் கொண்டு,கருப்பூரிலுள்ள மாமியார் வீட்டு விருந்துக்கு மாப்பிள்ளை வந்துள்ளார்.
அப்போது, தனக்குப் புத்தாண்டுக்குப் புதுத்துணி வேண்டும் என்று மனைவி கேட்கவே சேலத்திற்குக் கணவர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த கடைகளில் துணிகளை எடுத்துக் கொண்டு இருந்த போது மனைவி மாயமாகியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து நிலையத்தில் மனைவியைத் தேடி அலைந்துள்ளார்.
எங்குத் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அடுத்த நாளே மாயமான பெண் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது கணவருக்குத் தகவல் கொடுத்தனர்.
இளம்பெண்
தகவலின் பேரில் வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது இளம்பெண்ணின் கழுத்தில் இரண்டு தாலிகள் இருந்தது. இது குறித்து விசாரித்த போது திருமணத்திற்கு முன்பே சேலம் கோரிமேட்டை சேர்ந்த செந்தில் என்பவரை இந்த பெண் காதலித்து வந்தது தெரியவந்தது.
அவரை தற்பொழுது திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், மகளைச் சமாதானம் செய்தனர். ஆனாலும், காதலன்தான் தனக்கு வேண்டும் என்று உறுதியாகச் சொன்ன அந்த பெண், முறைப்படி அவரையே திருமணம் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.
மேலும் காதலன் கட்டிய மஞ்ச தாலியையும் கழற்றி வீசிவிட்டார். அத்துடன் முதல் கணவரை விவாகரத்து செய்து விடுவதாகவும், இப்போதைக்குப் பெற்றோருடன் செல்வதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.