டியூசன் படித்த 10ஆம் வகுப்புமாணவனுடன் காதல் - 23 வயது பெண்ணுடன் செய்த செயல்
10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரி அழைத்து சென்ற 23 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவன்
சென்னை அசோக் நகர் பகுதியில் 10 ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுவன் தேர்வில் தோல்வியடைந்ததால் ஒரு ஆசிரியையிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி சிறுவன் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி சுற்றுலா
புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி சிறுவன் பாண்டிச்சேரியில் டியூசன் படிக்கும் ஆசிரியையின் 23 வயதான தங்கையும் மற்றும் ராகுல் என்ற இளைஞருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாகவே சிறுவனும் இளம்பெண்ணும்காதலித்து வந்தது வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இரு தரப்பும் சமமாக செல்வதாக உறுதியளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போக்சோ
இது நடந்து 15 நாட்களுக்கு பின்னர் சிறுவன் மாயமானதால் காவல்துறையினர் நேராக டியூசன் ஆசிரியை வீட்டிற்கு சென்று விசாரித்த போது டியூஷன் ஆசிரியையின் தங்கையும் வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புதுச்சேரிக்கு சென்ற காவல்துறையினர் சிறுவன் ஆசிரியையின் தங்கை, மற்றும் ராகுல் என்ற இளைஞரை சென்னை அழைத்து வந்துள்ளனர்.
சிறுவனை மீட்டு பெற்றோரிடம் அனுப்பி வைத்த காவல்துறையினர் 24 வயதான இளம்பெண் மற்றும் 18 வயதான ராகுல் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.