ஆசையாக தாயுடன் பள்ளிக்கு சென்ற மகன் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்!

Crime Accident Erode
By Vidhya Senthil Nov 05, 2024 01:18 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  பள்ளிக்குச் சென்ற மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் அமரேஸ்-ராணி தம்பதியினர் . இவர்களுக்கு ஐந்து வயதில் அபினவை என்ற மகன் உள்ளார். ராணி எப்பொழுதும் அபினவை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

The mother died in front of her son who went to school

இந்த நிலையில் வழக்கம் போல் சிறுவனைப் பள்ளியில் விடுவதற்காக ராணி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மொடக்குறிச்சி அருகே சென்றபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

தம்பி மனைவியின் உதட்டை கடித்து துப்பிய அண்ணன்.. துடித்துடித்த பெண் - பகீர் சம்பவம்!

தம்பி மனைவியின் உதட்டை கடித்து துப்பிய அண்ணன்.. துடித்துடித்த பெண் - பகீர் சம்பவம்!

இதில் தாய் ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அபினவ் காயத்துடன் சாலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  தாய் உயிரிழப்பு 

மேலும் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் , சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

erode acident

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.