பெற்ற குழந்தையை விற்க பேஸ்புக்கில் விளம்பரம் - கார் வாங்க தாய் செய்த கொடூரம்
கார் வாங்குவதற்காக தாயே பெற்ற குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் விளம்பரம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜூனிபர் பிரைசன் என்ற பெண், தனக்கு பிறக்கப்போகும் ஆண் குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்களைத் தேடுவதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தினரிடமும் குழந்தையை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கார்அல்லது அபார்ட்மெண்ட் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதே போல் பலரிடமும் கூறி வந்துள்ளார்.
தாய் கைது
அவர் மருத்துவமனையில் இருக்கும் போது குழந்தையைப் தத்தெடுக்கொள்ள ஒரு தம்பதி முன்வந்துள்ளனர். ஆனால் இவர் பணம் கேட்டதால் அந்த தம்பதி பின்வாங்கிவிட்டனர்.
இறுதியாக வில்லியம்சன் என்ற பெண் பிரைசன் பிரசவத்துக்குச் செல்லும்போது உடன் இருந்து, சில நாட்கள் கவனித்துக் கொண்டு, பின்னர் அவரே சட்ட ஆவணங்களில் முறைப்படி கையெழுத்திட்டு குழந்தையை வாங்கியுள்ளார். குழந்தையை விற்றது குறித்தும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து குழந்தை பாதுகாப்பு சேவை மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக குழந்தையை விற்ற குற்றத்திற்காக பிரைசன் கைது செய்யப்பட்டுள்ளார்.