ஆசையாய் குழந்தைகள் செய்த செயல்..மோசமான வார்த்தைகளால் திட்டிய பெண் - viral video!

Viral Video India Bengaluru
By Swetha Sep 24, 2024 03:30 PM GMT
Report

பூக்கோலத்தை பெண் ஒருவர் காலால் அழிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பூக்கோலம்..

பெங்களூரு தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது அபார்ட்மென்டின் பொது உபயோக பயன்பாட்டு இடத்தில் அழகிய பூக்கோலம் இட்டிருந்தனர்.

 ஆசையாய் குழந்தைகள் செய்த செயல்..மோசமான வார்த்தைகளால் திட்டிய பெண் - viral video! | Woman Destroy Onam Pookalam Made By Kids And Slams

அதனை பார்த்த அதே அபார்ட்மென்டில் வசிக்கும் சிமி நாயர் என்ற மலையாளி பெண் ஒருவர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதாவது ஓணம் விழா கொண்டாட்டத்திற்காக அபார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் பலர்,

இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 4 மணிக்கு கோலத்தை தயார் செய்துள்ளனர். இவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய பூக்கோலத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் காலால் மிதித்து அழித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

பொன்னி நதி பாடலில் வரும் செக்க சிகப்பி , யார் தெரியுமா ?

பொன்னி நதி பாடலில் வரும் செக்க சிகப்பி , யார் தெரியுமா ?

அழித்த பெண்

'கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே; பொது இடத்தில் ஏன் போட வேண்டும்' என்பதே அவரது வாதமாகும். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மாறி மாறி வாக்குவாதம் செய்தபடி கோலத்தை அழிக்கும் செய்கையை அங்கிருந்த சிலர்,


வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர். கோலத்தை அழிக்க வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் மன்றாடி கேட்டும், அதை பொருட்படுத்தாமல் அவர் அழிக்கும் காட்சி வீடியோவில் இருந்தது. அதனை பார்த்த பலர், 'ஒரு பெண் இப்படியும் செய்வாரா,

அவரும் மலையாளி தானே, ஏன் இத்தனை ஆவேசம், படித்தால் மட்டும் போதுமா, அடிப்படை நாகரிகம் கூட இல்லையா' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மலையாளி சங்கத்தினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி பெண் மீது வழக்கு பதிந்துள்ளனர்.