பொன்னி நதி பாடலில் வரும் செக்க சிகப்பி , யார் தெரியுமா ?
மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன்
சமீபத்தில்பொன்னியின் செல்வனின் டீசர் வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர்.
இந்தச் சூழலில், படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது, அந்த பாடல் வரிகள் குறித்த சிறிய விளக்கதை காண்போம்.
பொன்னிநதி பார்க்கணுமே
வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனிடம் ஒலை வாங்கி சோழ தேசத்தில் சேர்க்க வேண்டும் இதற்காக வீர நாரயாணன் ஏரியிலிருந்து புறப்படும் வந்தியத்தேவன் பொன்னி நதி அதாவது , காவேரி நதியினை காணவேண்டும் , அங்கு விளையும் நெற்பயிரினை காணவேண்டும் அங்கு உள்ள இளம் பெண்களை காணவேண்டும் என வந்தியத்தேவன் ஆனந்தமாக சோழ தேசத்திற்கு தனது குதிரையுடன் செல்லும் காட்சிதான் தற்போது பாடலாக வந்துள்ளது .
காவிரியாள் நீர் மடிக்கு என்று தொடங்கும் பாடலில், நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும், சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் என சோழ தேசத்தின் பெருமையையும், பொன்னி நதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
செக்க சிகப்பி
மேலும், செக்க சிகப்பி நெஞ்சில் இருடி ரெட்டை சூழச்சி ஒட்டி இருடி, இந்த வரிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்ததை காணலாம் இது ஒரு பெண்ணை வர்ணிப்பதாக இருந்தாலும் தனது பயணத்தை குதிரையில் தொடரும் வந்தியத்தேவன் தனது குதிரையினை செல்லமாக செகப்பி எனக் கூறியுள்ளார் .
கதைப்படி வந்தியத்தேவன் குதிரை கொஞ்சம் சேட்டை செய்யும் என்பது பொன்னியின் செல்வன் படித்த வாசகர்கள் நன்கு அறிவார்கள் ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என்ற பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.