PS-2 பார்க்க 2 பிள்ளைகளுடன் சென்ற பெண் - 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
பொன்னியின் செல்வன் - 2 படம் பார்க்க சென்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம்
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில்,
இங்கு மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெண் தற்கொலை
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்காக 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது, பாத்ரூம் சென்று விட்டு வருவதாக தனது இரண்டு பிள்ளைகளிடம் கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்றவர்
உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென கார் பார்க்கிங்கின் 4-வது தளத்தில் இருந்து ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தார்.
அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.