பரோட்டா இல்லாத காரணத்தால் சீரியல் நடிகை தற்கொலை : வெளியான பகீர் தகவல்
பிரபல சீரியல் நடிகை ஒருவர் பரோட்ட செய்து கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை தற்கொலை
ஒடிசாவைச் சேர்ந்த நடிகையும் , பாடகியுமான ருச்சிஸ்மிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த துயர சம்பவம் குறித்து குடும்பத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரோட்டா
அவரது மர்ம மரணம் குறித்து பாலங்கிர் போலீசார் தற்போது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அவருடைய மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தற்கொலைக்கு முன் தாயாருடன் பரோட்டா செய்வது தொடர்பாக ருச்சிஸ்மிதா சண்டையிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறு இரவு பரோட்டா செய்ய தாமதமாகும் என்று கூறியதால் சண்டை ஏற்பட்டதாக நடிகையின் தாயார் கூறியுள்ளார். மேலும், போலீசார் இது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பரோட்டாவுக்காக சீரியல் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஓடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.