கண்டித்த குடும்பம் - கள்ளக்காதலுக்காக தீக்குளித்து பெண் தற்கொலை!
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்
கேரளா, கொச்சி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி நீது(35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஹெர்பர்ட் நகரில் வசிக்கும் திருமணமான ஒருவருக்கும், நீதுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டும், அடிக்கடி தனியாக சந்தித்தும் வந்துள்ளனர்.
பெண் தற்கொலை
இதையறிந்த வீட்டார் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் கருத்து வேறுபாடம் இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான நீது, கள்ளக்காதலன் வீட்டிற்கு கையில் மண்ணெணெய் கேனுடன் சென்று, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின், தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.