உயிரிழந்த செல்ல பூனை.. 2 நாட்களாக உடலுடன் இருந்த இளம்பெண் - கடைசியில் நேர்ந்த கதி!
செல்லமாக வளர்த்த பூனை இறந்த தூக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்ல பூனை
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா. 36 வயதான இவருக்குக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுப் பெற்றோர் வீட்டில் தாயார் கஜ்ரா தேவியுடன் வசித்து வந்துள்ளார்.
தனிமையிலிருந்த வந்த அவர் செல்ல பிராணியாகப் பூனை ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அதனை தன் பிள்ளை போல் எண்ணி அதற்கு ஆடைகளை அணிவித்து, பாதுகாப்பாக வளர்த்து மகிழ்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த எதிர்பாராத விதமாகப் பூனை இறந்தது.
அப்போது அதனை அடக்கம் செய்து விடலாம் என அவரது தாய் கூறியுள்ளார். ஆனால், அது உயிர் பெற்றுத் திரும்பி வந்து விடும் எனக் கூறிய பூஜா 2 நாட்களாகப் பூனையின் உடலை உடன் வைத்திருக்கிறார். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கூறியும் அடக்கம் செய்ய பூஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில், 3-வது நாளான நேற்று மதியம் வீட்டின் 3-வது தளத்தில் உள்ள அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் தேவி ,அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.
அப்போது பூஜா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
