திருமணமான 6 மாதத்தில்.. இளம்பெண் விபரீத முடிவு - என்ன நடந்தது?
திருமணமான 6 மாதத்தில், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கன்னியாகுமரி, கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா(26). பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் உறுதியாக இருந்ததால், இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.
பெண் தற்கொலை
தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். அதில்தான் இருவரும் வசித்து வந்துள்ளனர். நிதின் பிஇ படித்திருந்த நிலையில் வெளிநாடு செல்வதாக கூறிவந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஜெமலா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும், அவருடைய உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஜெமலா தாய் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil
