சிக்ரெட் பிடித்த இளம்பெண்; மூச்சு திணறிய குழந்தை - வீடியோவால் கொதித்த நெட்டிசன்கள்!
இளம்பெண் கையில் குழந்தையுடன் சிகரெட் பிடித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரீல்ஸ் மோகம்
இளம்பெண் ஒருவர், பாட்டு படித்தபடி, சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் இளம்பெண் கையில் குழந்தையுடன் இருக்கிறார்.
அந்த குழந்தைக்கு சிகரெட் புகையின் நெடியால் சற்று மூச்சு திணறி, இருமல் ஏற்படுகிறது. இருப்பினும் அதனை கண்டுக்கொள்ளாமல் புன்னகைத்தபடி அந்த இளம்பெண் காட்சி தருகிறார்.
ஷாக் வீடியோ
இதனை சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளரான தீபிகா நாராயண் பரத்வாஜ் என்பவர் பகிர்ந்து, இந்த ரீல் அரக்கர்களிடம் குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளனர்.
Feel terrible for kids around these reel monsters pic.twitter.com/VujAzvmClj
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 17, 2024
அது பயங்கர உணர்வை ஏற்படுத்துகிறது என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு, விமர்சித்து வருகின்றனர்.