ஒரு வாரத்துக்கு 400 சிகரெட் பிடித்த 17 வயது சிறுமி - ஓட்டையான நுரையீரல்!
அளவுக்கு அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது சிறுமியின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்மோனரி பிலெப்
பிரிட்டனை சேர்ந்தவர் ௧௭ வயது சிறுமியான கைலா பிளைத். இவர் ஒரு வாரத்துக்கு 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இதன் மூலம் ஏறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் கைலா மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் அவரது நுரையீரலில் 'பல்மோனரி பிலெப்' எனப்படும் ஓட்டை விழுந்துள்ளதாக தெரியவந்தது.
அறுவை சிகிச்சை
இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை நீக்கினர். இதனால் கைல பிளைத் உயிர்பிழைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். இதனால் ஆபத்து ஏதும் இருக்காது என கருதிய எனக்கு தற்போது ஏற்பட்ட வயிற்று வலி ஒரு பாடத்தை புகட்டியது. இனி நான் ஒருபோதும் சிகரெட்டை தொடமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.