ஆசையாக பான் சாப்பிட்ட சிறுமி - வயிற்றில் ஏற்பட்ட ஓட்டை!! பெங்களூரில் அதிர்ச்சி
திரவ நைட்ரஜன் காரணமாக சிறுமி ஒருவரின் வயற்றில் ஓட்டை உண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரவ நைட்ரஜன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலி ஏற்பட்டு துடித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என அறிவுறுதல்கள் வெளியான நிலையில், பல இடங்களில் இந்த ஸ்மோக் நைட்ரஜன் உபயோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. வயிற்றில் ஓட்டை இச்சுழலில் தான் பெங்களூவில் மற்றுமொரு அதிர்ச்சி தர கூடிய சம்பவம் நடந்துள்ளது.
வயிற்றில் ஓட்டை
12 வயது சிறுமி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடாவை உட்கொண்டுள்ளார். சிறுமிக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் கடுமையாக வயிற்று வலி ஏற்பட அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்களுமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, சிறுமி உடலில் 4×5 செ.மீ., அளவில் துளை - ஓட்டை ஏற்பட்டுள்ளது. இந்த ஓட்டையை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும் என்ற காரணத்தால், உடனே சிகிச்சை நடத்தப்பட்டு 6 நாட்கள் சிகிச்சைக்குப் பின் சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
திரவ நைட்ரஜன் காரணமாக, சிறுமி வயிற்றில் இவ்வாறான துளை ஏற்பட்டது தொடர்பான செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டபோதிலும், தொடர்ந்து குழந்தைகளுக்கு இது போன்ற திரவ நைட்ரஜனை விநியோகித்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொளவ் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.