குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த இளம்பெண் - பகீர் பின்னணி!
தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையுடன் தற்கொலை
கோவை, பெள்ளாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(31). சைக்கிள் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி(28). இவர்களுக்கு இரண்டரை வயதில் மகள் உள்ளார்.
கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பின் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தேடியுள்ளார். ஆனாலும் எங்கும் கிடைக்காததால் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த கிணற்றின் ஓரத்தில் கலாமணியின் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. அங்கு சென்று பார்த்ததில் கலாமணி மற்றும் குழந்தை பிணமாக மிதந்துள்ளனர். உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில், கலாமணி தனது மார்போடு சேர்த்து மகள் அஸ்விக்காவை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.
இவர் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து தகவல் தெரியவராத நிலையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.