ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை - மீட்புப் பணி தீவிரம்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தவறி விழுந்த குழந்தை
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் குல் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தன 3 வயதே ஆன குழந்தையுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். தாயார் குழந்தையை விளையாட விட்டுவிட்டு தோட்டத்தில் வேலை செய்துள்ளார்.
அப்போது குழந்தை அந்த தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த ஆழ்த்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்டா தாயார் அதிர்ச்சியடைந்து கிராமத்தில் உள்ளவர்களை அழைத்துள்ளார். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணி
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 40 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.