5வது கணவனுடன் சிக்கிய இளம்பெண்; பதறிய ஃபைனான்ஸியர் - கட்டட மேஸ்திரி உறுதி!
கடன் வாங்கிவிட்டுத் தப்பியோடிய இளம்பெண் ஐந்தாவது கணவனுடன் சிக்கியுள்ளார்.
5 திருமணம்
வேலூர், குடியாத்தம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபைனான்ஸியர். இவரிடம் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் டூ வீலரை அடகுவைக்க வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட பழக்கம், நெருக்கமாகி அவரிடம் அதிக கடன்களை பெற்றுக்கொண்டு மாயமாகியுள்ளார். அதன்பின், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் வருத்தத்தில் இருந்துள்ளார்.
இளம்பெண் ஸ்கெட்ச்
இந்நிலையில், கடையொன்றில், வேறோர் ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணைக் கண்டதும், அருகில் இருந்த நபர் யார்? என விசாரித்துள்ளார். அதற்கு அந்தப் பெண் கணவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திருப்பிக் கேட்டதில் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இதனையடுத்து விவகாரம் காவல்நிலையம் வரை சென்ற நிலையில், இளம்பெண் ஏற்கெனவே மூன்று ஆண்களை அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டு, அவர்களுடன் வாழாமல் பிரிந்ததும், சில மாதங்களுக்கு முன்புதான் நான்காவதாக ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்ததும் தெரியவந்தது.
மேலும், கடைசியாகக் கட்டட மேஸ்திரி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வசித்துவந்திருக்கிறார். தற்போது, 5வது கணவனே கடனை திருப்பித் தருவதாக கால அவகாசம் கேட்டு பஞ்சாயத்தை முடித்துள்ளார்.