நடுரோட்டில் கதற கதற இளம்பெண் மீது உயிருடன் தீ வைத்து கொளுத்திய 3 கொடூர இளைஞர்கள்!
இங்கிலாந்தில் இரவில் 31 வயது இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து உயிருடன் எரித்துகொலை செய்துள்ள சம்பவம் உலகமெங்கும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு, 3 இளைஞர்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவர் மீது உயிருடன் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தீயில் எரிந்த இந்த இளம்பெண் போட்ட அலறல் சத்தத்தினால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
உடனடியாக அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த படுகொலை சம்பந்தமாக 24, 26, 34 வயதுடைய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.