5 கணவர்கள் கதறல்; 6வது கணவருடன் சென்ற பெண் - பரிதவிக்கும் குழந்தைகள்!
பெண் ஒருவர் 6 திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
6 திருமணம்
கள்ளக்குறிச்சி, மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னைத் துறைமுகப் பகுதியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது முதல் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், தாய் இறந்துவிட்டதாகவும், சித்தியின் பாதுகாப்பில் வாழ்ந்து வருவதால் அவர் சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து காளீஸ்வரியை சிவக்குமார் திருமணம் செய்துகொண்டார். இவர்களூக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி யாரிடமும் சொல்லாமல் வேறு ஒரு நபருடன் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.
கதறும் கணவர்
உடனே போலீஸில் புகாரளித்ததில், “நான் காணாமல் எல்லாம் போகவில்லை; சொந்த விருப்பத்தின் பேரில் தான் சென்றுள்ளேன்” என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின் கணவன் காளீஸ்வரியின் சொந்த ஊருக்கு சென்று சித்தி என்று கூறியவரிடம் விசாரித்துள்ளார்.
ஆனால், அவர் நான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகள்தான் காளீஸ்வரி. ஏற்கனவே நான்கு திருமணங்கள் ஆகிவிட்டன. அதை மறைத்து ஐந்தாவதாக உன்னைத் திருமணம் செய்துள்ளார். ஆறாவதாக ஆம்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து,
இதற்கு முன்பு காளீஸ்வரிக்கு நடந்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். தற்போது திருமண மோசடி செய்து பலரை ஏமாற்றிய காளீஸ்வரியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.