போதையில் போலீசாருடன் ரகளை - வீடியோ வெளியிட்டு சிக்கிய தொகுப்பாளினி
போதையில் ரகளை செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதையில் ரகளை
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

ரேவதியும் அவரது மாமாவும் அண்மையில் பார்ட்டிக்கு கோயம்பேடு சென்றுள்ளனர். அங்கு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே தங்கள் காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஹோட்டலில் உணவு வாங்க நின்றதாக கூறப்படுகிறது.
சிக்கிய ஆங்கர்
அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், தனது மாமா வேஷ்டி அணிந்து இருந்ததை பார்த்து கேலி செய்யும் விதமாக பேசியதாகவும், அதனால் நான் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி,
போலீசார் லத்தியால் தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், மதுபோதையில் காவல்துறையினரை ஆபாசமாக பேசியது தொடர்பாக சிஎம்பிடி போலீசார்,
வீடியோ அடிப்படையில் ரேவதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர்.