Thursday, May 8, 2025

தலை இல்லாமல் மிதந்து வந்த பெண் உடல் - அதிர்ந்த சுற்றுலா பயணிகள்

Tamil nadu Crime Dindigul
By Karthikraja 7 months ago
Report

 நீர்வீழ்ச்சியில் தலை இல்லாத பெண்ணின் சடலம் மிதந்து வந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. 

kodaikanal silver falls

விடுமுறை நாட்கள் என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை காரணமாக கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத்தலமான வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

தலை இல்லாத உடல்

இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் தலை இல்லாத பெண்ணின் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெண்ணின் உடல் அழுகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

kodaikanal silver falls

மேலும் அவர் தண்ணீரில் விழுந்து இறந்தாரா? அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியானாரா? அல்லது கொலை செய்து உடல் இங்கு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்