Wednesday, May 14, 2025

மாமியார், மருமகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - தந்தை, மகன் முன் நடந்த கொடூரம்

Sexual harassment Karnataka Andhra Pradesh
By Karthikraja 7 months ago
Report

கத்தி முனையில் இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த குடும்பம்

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து வேலைக்காக குடும்பம் ஒன்று ஆந்திர மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு பேப்பர் மில்லில் வேலை செய்து வந்துள்ளனர். 

2 women harassed in andhra

இரு நாட்களுக்கு முன்பு, தசரா பண்டிகையை முன்னிட்டு அந்த தொழிற்சாலைக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் குடும்பத்துடன் தொழிற்சாலையில் உள்ள அறையில் இரவு தூங்கியுள்ளனர். 

காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை - உள்ளாடையை கழட்டி மார்பில் உதைத்த அதிகாரி

காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை - உள்ளாடையை கழட்டி மார்பில் உதைத்த அதிகாரி

கூட்டு பாலியல் வன்கொடுமை

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த தந்தை மகனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், அங்கிருந்த மாமியார் மற்றும் மருமகளை கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். 

arrest

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். கஞ்சா போதையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட மற்ற இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.