காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை - உள்ளாடையை கழட்டி மார்பில் உதைத்த அதிகாரி
காவல் நிலையத்தில் வைத்து ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெஸ்டாரன்டில் தகராறு
ஒடிசாமாநிலத்தில் உள்ள ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, ரெஸ்டாரன்ட் ஒன்று நடத்தி வருகிறார். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
செப்டம்பர் 15-ந்தேதி நள்ளிரவு 1 மணியளவில் அவர்களுடைய ரெஸ்டாரன்ட்டுக்கு வந்த இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்க அவர்கள் மீது புகார் அளிக்க அந்த பெண் பரத்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
அங்கு வரவேற்பு பகுதியில் இருந்த பெண் போலீசிடம், வெளியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் என்னை துரத்தி வந்துள்ளனர். அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்து தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
தான் வழக்கறிஞர் என்று கூறிய போதும், அந்த பெண் போலீஸ் தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். உடன் வந்திருந்த அவரது வருங்கால கணவரான ராணுவ அதிகாரியை கைது காவலில் அடைத்துள்ளனர்.
தான் ராணுவ அதிகாரி தன்னை கைது செய்ய அனுமதி தேவை என்று அவர் கூறிய போதும், அவரின் அடையாள அட்டையை புடுங்கிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த நேரத்தில் காவல் நிலையத்திற்கு வந்த 2 பெண் காவலர்கள் இந்த பெண்ணின் முடியை பிடித்து தரதரவென உள்ளே இழுத்து சென்று தாக்கினர்.
பாலியல் வன்கொடுமை
அவர்களில் ஒருவர் என் கழுத்தை நெரிக்க தொடங்கியதால் நான் அவரது கையை கடித்தேன். உடனே என் ஜாக்கெட்டை கழற்றி இரண்டு கைகளையும் கட்டி விட்டு, துப்பட்டாவால் என் கால்களை கட்டி ஒரு அறைக்குள் என்னை வீசினர்.
அங்கு வந்த ஒரு ஆண் அதிகாரி என் மேல் உள்ளாடையை கழட்டி விட்டு என் மார்பில் உதைத்தார். அதன்பிறகு வந்த இன்ஸ்பெக்டர் அவரது பேன்ட் ஜிப்பை கழற்றி, அவரது ஆணுப்பை காட்டியதுடன், என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால் என கேலி செய்து விட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்தார்.
பாஜகவின் திறமையின்மை
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வழக்கு விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில டிஜிபி-யிடம் தேசிய பெண்கள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. காயம் அடைந்த பெண் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.
The way an Army Major and a lady were treated in Bharatpur Police Station is shocking and beyond comprehension. The manner in which police have allegedly treated them has shaken the conscience of the country. This has happened to a serving Army Officer and a lady within #Odisha.…
— Naveen Patnaik (@Naveen_Odisha) September 20, 2024
இது குறித்து கருத்து தெவித்துள்ள டிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்(Naveen Patnaik), "இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாஜகவின் திறமையின்மைமைய இந்த சம்பவம் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.