பேருந்து படுக்கையில் பிறந்த குழந்தை - ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த இளம் ஜோடி!
பிறந்த குழந்தையை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ்ஸில் பிரசவம்
மகாராஷ்டிரா, பர்பானியில் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 19 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
பேருந்தில் இருந்து ஜன்னல் வழியே குழந்தை வீசப்பட்டதை அறிந்த ஒருவர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "ரித்திகா தேரே என்ற பெண், புனேவிலிருந்து பர்பானிக்கு,
இளம் ஜோடி கொடூரம்
தனது கணவர் என்று கூறிக்கொண்ட அல்தாஃப் ஷேக்குடன், சாண்ட் பிரயாக் டிராவல்ஸின் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். பயணத்தின்போது, கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இருப்பினும், தம்பதியினர் புதிதாகப் பிறந்த குழந்தையை ஒரு துணியால் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை பெற்ற 19 வயது பெண்ணையும், உடன் இருந்த ஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், குழந்தையை வளர்க்க முடியாததால் புதிதாகப் பிறந்த குழந்தையை வீசிச் சென்றோம். மேலும் குழந்தை சாலையில் வீசப்பட்ட காரணத்தினால் இறந்துவிட்டது என்று இருவரும் தெரிவித்துள்ளனர்.