லாட்ஜில் பெண்ணுக்கு கொடுமை - ஆண் நண்பர்களுக்கு தோழி உடந்தை!

Chennai Sexual harassment Crime
By Sumathi Jul 07, 2025 10:04 AM GMT
Report

மது விருந்தில் கலந்துக்கொண்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

வேலூரைச் சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது பெண் தோழி(27) பெரம்பூரைச் சேர்ந்தவர்.

லாட்ஜில் பெண்ணுக்கு கொடுமை - ஆண் நண்பர்களுக்கு தோழி உடந்தை! | Woman Arrested Getting Friend Drunk Chennai

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் 2 அறைகளை எடுத்துவிட்டு, மது அருந்த அழைத்துள்ளார். அதன்படி, இந்த பெண் அந்த லாட்ஜூக்கு சென்று, பெண் தோழியுடன் மது அருந்தியுள்ளார்.

தோழியுடன் தனிமை; பார்த்த சிறுவன் வாயில் பீரை ஊற்றிய இளைஞர் - 50 அடி பள்ளத்தில் வீசிய கொடூரம்!

தோழியுடன் தனிமை; பார்த்த சிறுவன் வாயில் பீரை ஊற்றிய இளைஞர் - 50 அடி பள்ளத்தில் வீசிய கொடூரம்!

தோழி கைது

இந்நிலையில், இவருடைய பெண் தோழி, அவருக்கு தெரிந்த 2 ஆண் நண்பர்களை அறைக்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து 4 பேரும் மது அருந்தியுள்ளனர். பின் அங்கேயே தூங்கியுள்ளனர்.

லாட்ஜில் பெண்ணுக்கு கொடுமை - ஆண் நண்பர்களுக்கு தோழி உடந்தை! | Woman Arrested Getting Friend Drunk Chennai

இதனையடுத்து மறுநாள் காலையில் எழுந்து பார்த்ததில், அந்த பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுதொடர்பாக போலீஸில் புகாரளித்துள்ளார்.

அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீஸார் பெண் தோழி, அவரது ஆண் நண்பர் கொடுங்கையூரைச் சேர்ந்த மனாசே (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.