மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை - மகளால் நடந்த விபரீதம்!
வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப விவகாரம்
நாமக்கல், கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரமிளா (51).
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சம்யுக்தா (25). மகன் ஆதித்யா (21). இந்நிலையில், நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் கிடந்தது.
பெற்றோர் தற்கொலை
தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவரது மகளோ வேறு ஒருவரை காதலிப்பது ஆகவும் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எவ்வளவு பேசியும் மகள் சம்மதிக்காததால், மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.