தோழியுடன் தனிமை; பார்த்த சிறுவன் வாயில் பீரை ஊற்றிய இளைஞர் - 50 அடி பள்ளத்தில் வீசிய கொடூரம்!
தோழியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால் அவனை, இளைஞர் கொலை செய்துள்ளார்.
சிறுவன் கொலை
கிருஷ்ணகிரி, மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ்-மஞ்சு தம்பதியின் இளைய மகன் ரோகித்(13). அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று ரோகித் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான்.
தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாலையில் மாயமாகியுள்ளான். தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால், போலீஸில் புகாரளித்ததில் அங்கு அலட்சியம் காட்டியுள்ளனர். இதனையடுத்து கிராம மக்களைத் திரட்டி சிறுவனின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளைஞர் செய்த கொடூரம்
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களைப் பொதுமக்களே ஆய்வு செய்தபோது, சிறுவனை யாரோ இருவர் அழைத்துச் சென்று காரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. அதன்பின் போராட்டம் நடத்திய மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால்,
அவர்களை பிடித்து விசாரித்ததில் கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அந்தச் சிறுவனின் உடல் வீசப்பட்டிருப்பது அறியப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில், அவர்களில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்ததை பார்த்துள்ளான்.
இதனால் அவன் வெளியே சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் சிறுவனுக்கு வாயில் பீர் ஊற்றி மயக்கமடையச் செய்து, 50 அடி ஆழத்தில் இருந்து சிறுவனைத் தள்ளியுள்ளார். தற்போது அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.