காசுக்காக இப்படியா? உல்லாசமாய் இருந்த வீடியோ வைத்து 4 பேருடன் பெண் செய்த காரியம் !
உல்லாச வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உல்லாச வீடியோ
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.அண்மையில் இவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் அதே ஊரை சேர்ந்த சுபாஷினி(40) என்ற பெண்ணுடன் 6 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அப்படி இருவரும்ந தனிமையில் இருந்த விடியோவை படம்பிடித்து சுபாஷினி மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் செய்த காரியம்
ஒவ்வொரு முறையும் அவரை பார்க்க செல்லும்போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். அப்போது கடந்த மாதம் இருவரும் உல்லாசமாக இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின் 2 நாள் கழித்து வெங்கடேசனை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சுபாஷினி அதே சமயத்தில் தனது கூட்டாளியான கில்லி பிரகாஷ் (எ) பிரகாஷ் (40) என்பவரையும் அழைத்துள்ளார். அங்கு மற்ற கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து
வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பறித்துள்ளனர். மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக 10 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாகவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சுபாஷினிஉள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.